சொல் பொருள்
போக்காடு – சாவு
சொல் பொருள் விளக்கம்
நோக்காடு நோவு, சாக்காடு சாவு என வருதல் போலப் போக்காடு ‘போவு’ என வழக்கில் இல்லை. போக்காடு ‘சாவு’ என்னும் பொருளில் வழங்குகின்றது. இந்தப்பாடுபட்டுக் கேவலப்படுவதற்குப் போக்காடு வந்தாலும் ஒரே போக்காகப் போய்ச் சேரலாம்” என்பதில் போக்காட்டின் பொருள் நன்கு வெளிப்படும். போனகாடு, போகின்ற காடு, போகுங்காடு என்னும் பொருளில் ‘போங்காடாக’ வர வேண்டியது வல்லொற்றாகி ‘போக்காடு’ என நின்றது போலும். காடு என்பது இடுகாடு, சுடுகாடு, முதுகாடு, நன்காடு என்பவற்றில் வருதல் அறிக. அனைவரும் போங்காடு போக்காடாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்