சொல் பொருள்
(வி) 1. போ, செல், 2. வா 3. திரும்பு, வந்துசேர்,
சொல் பொருள் விளக்கம்
போ, செல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
go, proceed, come, come back, return
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீயும் தவறு இலை நின்னை புறங்கடை போதர விட்ட நுமரும் தவறு இலர் – கலி 56/30,31 உன்மீதும் தவறில்லை; உன்னை வெளியே போகவிட்ட உன் வீட்டார் மீதும் தவறில்லை; ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள் போதரின் காண்குவேன்-மன்னோ – கலி 145/32,33 விரைவாக, என் காதலரை அழைத்துக்கொண்டு, கடலைக் கிழித்துக்கொண்டு காலையில் இங்கு வந்தால் அவரைக் காண்பேன், முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள நல்ல காண்குவம் மாஅயோயே பாசறை அரும் தொழில் உதவி நம் காதல் நன் நாட்டு போதரும் பொழுதே – ஐங் 446 முல்லை மணக்கும் கூந்தல் மேலும் மணங்கமழ, நல்ல இன்பங்களைக் காண்போம், மாநிறத்தவளே! பாசறையில் தங்கிச் செய்யும் அரிய போர்த்தொழிலில் மன்னனுக்கு உதவிவிட்டு, நம் அன்புக்குரிய நல்ல நாட்டுக்கு நான் திரும்பும் பொழு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்