சொல் பொருள்
(பெ) 1. பனை, 2. சோழநாட்டிலுள்ள ஓர் ஊர்,
சொல் பொருள் விளக்கம்
பனை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
palmyrah palm
a city in chOzha land
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் மணல் பொதுளிய பைம் கால் கருக்கின் கொம்மை போந்தை குடுமி வெண் தோட்டு – குறு 281/1,2 வெள்ளிய மணற்பரப்பில் தழைத்த பசிய அடியையும், கருக்கினையும் உடைய திரண்ட பனையின் உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையோடு சேர்த்து வைத்த நெடுவேள் ஆதன் போந்தை அன்ன பெரும் சீர் அரும் கொண்டியளே – புறம் 338/4,5 நெடுவேள் ஆதன் என்பானது போந்தை என்னும் ஊரைப் போன்று பெருத்த சீருடனே அரும் போர் உடற்றி பகைவரிடத்தே கொண்ட செல்வமுடையவள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்