சொல் பொருள்
(வி.மு) போல் இல்லாதிருக்கிறான்,
சொல் பொருள் விளக்கம்
போல் இல்லாதிருக்கிறான்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
he is not like that
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடி நிலை கலங்க வாடிய தோளும் வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன் எம் வெம் காதலொடு பிரிந்தோர் தம்மோன் போலான் பேர் அன்பினனே – ஐங் 475 தோள்வளைகள் தம் நிலையிலிருந்து நெகிழ்ந்துபோகுமாறு வாடிப்போன தோள்களையும், மாவடு போன்ற தம் அழகை இழந்த என் கண்களையும் நோக்கி, பெரிதும் வருந்தினான் சீறியாழ்ப் பாணன்! எம்முடைய விருப்பமான காதலோடு பிரிந்துசென்ற தன் தலைவரைப் போன்றவன் அல்லன் இவன்; பேரன்பினன்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்