சொல் பொருள்
(வி.மு) போல இல்லை நீ
சொல் பொருள் விளக்கம்
போல இல்லை நீ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
you don’t appear like that
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எல் வளை நெகிழ மேனி வாட பல் இதழ் உண்கண் பனி அலை கலங்க துறந்தோன் மன்ற மறம் கெழு குருசில் அது மற்று உணர்ந்தனை போலாய் இன்னும் வருதி என அவர் தகவே – ஐங் 471 ஒளியுமிழும் வளைகள் கழன்று ஓட, மேனி வாடிப்போக, பல இதழ்களைக் கொண்ட மலர் போன்ற மையுண்ட கண்கள் கண்ணீரால் அலைப்புண்டு கலங்கிப்போக, பிரிந்துசென்றான், உண்மையாக, வீரம் பொருந்திய தலைவன்; அதனைத் தெளிவாக உணர்ந்தவன் போல் இல்லை நீ, இப்பொழுதும் வந்து நிற்கிறாய்; என்ன ஆயிற்று அவரின் தகுதி?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்