Skip to content

சொல் பொருள்

1. (பெ.அ) போன்ற, போல இருக்கிற,  2. (வி.மு) போல இருக்கிறது, 

சொல் பொருள் விளக்கம்

போன்ற, போல இருக்கிற,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

like

 it is likely, it looks like

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறு இரும் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும் – நற் 166/1-4

பொன்னும் நீலமணியும் போன்ற உன்
நல்ல மேனியும், மணங்கமழும் கரிய கூந்தலும்;
பூக்கின்ற மலரும், மூங்கிலும் போன்ற உன்
அழகிய மையுண்ட கண்களும், வனப்புள்ள தோள்களும்

வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து
எழுது எழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே – நற் 177/8-10

வந்துவிட்டது போல இருக்கிறது, தோழி! மிகவும் நொந்துபோய்
தீட்டிய அழகைக் கொண்ட மையுண்ட கண்களின் கண்மணிகள்
கேடுவிளைவிக்கும் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தும் நாள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *