Skip to content

சொல் பொருள்

(பெ) 1. திருமணம்,  2. இனிய வாசனை,  3. கூடுதல்,

சொல் பொருள் விளக்கம்

திருமணம், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wedding, fragrance, union

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன
அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி – பொரு 19,20

(புது)மணக்கோலம் பொலிவு பெற்ற மாதரை ஒப்பனைசெய்து கண்டாற் போன்ற,
(யாழ்க்குரிய)தெய்வம் நிலைத்துநின்ற (நன்கு)அமைந்துவரப்பெற்ற தோற்றத்தையுடைய,

மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 354

மஞ்சளையுடைய முற்றத்தினையும் இனிய வாசனை கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய

கதிர்க்கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் – புறம் 266/4,5

கதிர்போலும் கோட்டையுடைய நத்தையினது சுரி முகத்தையுடைய ஏற்றை
நாகாகிய இளைய சங்குடனே பகற்காலத்தே கூடி மகிழும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *