Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஒன்றுசேர்தல், கூடுதல், 2. எய்துதல்,

சொல் பொருள் விளக்கம்

ஒன்றுசேர்தல், கூடுதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the act of uniting, acquiring, attaining

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பகலும் நம்_வயின் அகலான் ஆகி
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன்
இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது
மல்லல் மூதூர் மறையினை சென்று
சொல்லின் எவனோ பாண – அகம் 50/5-10

பகலிலும் நம்மைவிட்டு அகலாதவனாகி,
(முன்பெல்லாம்)அடிக்கடி வருவானே! குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவன்;
இப்பொழுதோ, ஒன்றுசேர்வதற்கு அரிதாயிருந்த (பழைய)விருப்பம் நீங்கிவிட, (இப்பொழுது இருக்குமிடத்தைத்)
துறந்து
வராமலிருப்பவர் நமக்கு யார் என்று வாளாவிராமல்,
(இப்பொழுது தலைவன் இருக்கும் அந்த)வளமிக்க பழமையான ஊருக்கு மறைவாகச் சென்று
(அவனிடம்) சொன்னால் என்ன பாணனே!,

மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார் – அகம் 112/15

எய்துதற்கு அரிய காமத்தால் நீர் கூடிய களவொழுக்கத்தினை அறியாத எமர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *