சொல் பொருள் விளக்கம்
(பெ) 1. கண்டை, 2. விலையுயர்ந்த கல், நவரத்தினம், 3. நீலமணி, 4. பளிங்கு 5. மணியோசை,
ஒரு குறுமைப் பொருள் முன்னொட்டு
தக்காளி இனத்தில் சிறியது மணித்தக்காளி
கரியது
நீலக்கல்
நாழிமணி
ஒளிக்கல்
மணிப்புறா
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bell, gong, gem, precious stones, sapphire, crystal, sound of a bell
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50 நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்தும், முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 84,85 முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள் மின்னலுக்கு மாற்றாகும் சிமிட்டலுடன் தலையில் பொலிவுபெறவும், பொன் கொன்றை மணி காயா – பொரு 201 பொன்னிறம் போன்ற நிறமுடைய கொன்றை மலரினையும், நீலமணி போன்ற காயா மலரினையும் உடைய, மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க – அகம் 56/2 பளிங்கைப் போன்ற தெளிந்த நீருள்ள குளம் அலையடித்துக் கலங்க மணி ஓர்த்து அன்ன தெண் குரல் – அகம் 151/14 மணியோசையைக் கேட்டாற் போலும் தெளிந்த குரலைக்கொண்ட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்