Skip to content

சொல் பொருள்

(பெ) 1. இரவலர் உண்கலம்,  2. உண்கலம், 3. மண்கலம்,  4. கபாலம், மண்டையோடு, 

சொல் பொருள் விளக்கம்

இரவலர் உண்கலம், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

mendicants’ begging bowl

vessel for eating/drinking

earthen vessel

skull

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொழுது இடைப்படாஅ புலரா மண்டை
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப – புறம் 103/9,10

ஒருபொழுதும் ஓயாமல் உண்ணவும் தின்னவும்படுதலான் ஈரம் புலராத கலம்
மெழுகான் இயன்ற மெல்லிய அடை போல கொழுத்த நிணம் மிக

அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/10

அரிய தலைமையையுடைய பெரிய பாணரது அகலிய பாத்திரத்தின்கண் துளையையுருவி

விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை
இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து – புறம் 384/7,8

விழா நிகழா வழியும் உழவருடைய உண்கலத்தில்
பெரிய கெடிற்று மீனாகிய உணவுடனே இஞ்சி முதலிய பூ விரவிய கள் நிறைந்திருக்கும்

செந்தீ அணங்கிய செழு நிண கொழும் குறை
மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு– அகம் 237/9,10

செந்தீயில் சுட்ட வளம் பொருந்திய நினத்தில் கொழிவிய துண்டுகளை
மெல்லிய தினைச்சோற்றிலே சொரிந்த கலத்துடன்

உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் – அகம் 86/8,9

உச்சியில் குடத்தினை உடையவரும், கையினில் புதிய மண்டை எனும் அகன்ற கலத்தினை உடையவரும் ஆகிய
மனத்தினைச் செய்துவைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கலப்பெண்டிர்

பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/5-9

மனம் பொருந்தாத பகைவர் உடலினின்றும் துண்டித்த தலைகளாற் செய்யப்பட்ட அடுப்பிலே
கூவிளங்கட்டையாகிய விறகிட்டெரித்து ஆக்கப்படும் கூழிடையே வரிக்குடர்கள் பிறழ்ந்து பொங்க
தலையிற் பொருந்தாத மண்டையோடு அகப்பையாகவும், வன்னிமரத்தின் கொம்பு அதில் செருகப்பட்ட காம்பாகவும் கொண்டு 
ஈனாத பேய்மகள் தோண்டித்துழாவிச் சமைத்த
மாக்களுமுண்ண மறுக்கும் ஊன்சோறாகிய பிண்டத்தை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *