சொல் பொருள்
(வி) 1. கழுவு, 2. குளி, குளிப்பாட்டு, நீராடு, நீராட்டு, 3. ஒப்பனைசெய், 4. பூசு, 5. செய், 6. செம்மைப்படுத்து
சொல் பொருள் விளக்கம்
கழுவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wash, clean by washing, bathe, adorn, decorate, smear, do perform, polish, finish, perfect
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை – அகம் 136/13 கழுவிய நீலமணியை ஒத்த கரிய இதழையுடைய பாவை பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய துகில் விரி கடுப்ப நுடங்கி – புறம் 337/8,9 பெண்மைநலம் நிறைந்த பொற்புடனே, கழுவப்பட்ட துகிலை விரித்தவழி அது நுடங்குவது போல நுடங்கி நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல – அகம் 62/10 நெடிது சுழலும் சுழிகளையுடைய வெள்ளத்திற் படிந்து குளிப்பவள் போல வதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்று பூக்கணும் இமையார் நோக்குபு மறைய – அகம் 136/8,9 தலைவிக்கு மணநீராட்டிய மகளிர் விரைவாக தமது கூரிய கண்களாலும் இமையாராய் நோக்கி மறைந்திட மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி – பொரு 19,20 (புது)மணக்கோலம் பொலிவு பெற்ற மாதரை ஒப்பனைசெய்து கண்டாற் போன்ற, (யாழ்க்குரிய)தெய்வம் நிலைத்துநின்ற (நன்கு)அமைந்துவரப்பெற்ற தோற்றத்தையுடைய, தகரம் மண்ணிய தண் நறு முச்சி – அகம் 393/23 மயிர்ச்சாந்து பூசிய தண்ணிய நறிய கூந்தலில் ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து – மது 494 யாகங்களைச் செய்து, பளிச்சிடும் மெல்லிய ஆடையைச் சுற்றிக் கட்டி, கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர் புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன் – நற் 94/4-6 கைத்தொழிலில் வல்ல கம்மியன் அழகுபெறக் கழுவாத செம்மைப்படுத்தப்படாத பசுமுத்தைப் போல குவிந்த கொத்துக்களையுடைய புன்னை மரம் அரும்புவிட்டிருக்கின்ற புலவுநாறும் கடற்கரைத் தலைவனான தலைவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்