சொல் பொருள்
(பெ) குளம் முதலியவற்றில் நீர் பாயும் மடைவகை,
ஏரி, குளம் ஆயவற்றின் நீர்ப் போக்கி
மட்குழாயை மதகு என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
அணை, ஏரி முதலியவற்றில், தேவையான நீரைச் சீராக வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய
அமைப்பு.
ஏரி, குளம் ஆயவற்றின் நீர்ப் போக்கியை மதகு என்பது பொது வழகுக்கு. அம் மதகு அமைப்பில் நீர் செல்லுமாறு அமைக்கப்பட்ட மட்குழாயை மதகு என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. மதகுபட்டி என ஊர்ப் பெயர் முகவை மாவட்டத்துள்ளது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sluice to let off water from a tank
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் – பரி 24/66 மிக்க நுரையுடன் மதகுகள்தோறும் புகுந்து வெளிவரும் நீர் கரை புரண்டு ஓடும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்