சொல் பொருள்
(வி) 1. நிலைபெறு, நீடித்திரு, 2. பொருந்து, இயைபுடன் இரு
சொல் பொருள் விளக்கம்
நிலைபெறு, நீடித்திரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
endure, be lasting, permanent, agree, be in accord with
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் – புறம் 165/1 எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தின்கண் நிலைபெறுதலைக் கருதினோர் பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர் – பரி 19/89 பலவகைப்பட்ட நறுமணங்களும் பொருந்திய பின்னலையுடைய கருங்கூந்தலையுடைய மகளிரும், இவள் மன்னும் ஒண்_நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும் முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி தன் கண்ணினும் முகத்தினும் நகுபவள் – கலி 142/5-8 இவளைப் பொருந்திச் சூழ்ந்திருக்கும் ஒளிவிடும் நெற்றியையுடைய தோழியர் எல்லாரும் ஒன்றாகக் கூடிச் சிரிக்கும் காலத்திலும், முள்ளின் நுனை போன்ற தன் பற்கள் வெளியில் தெரியாமல் புன்முறுவல் கொண்டு, சிரிப்பை அடக்கித் தன் கண்ணாலும், முகத்தாலும் மட்டுமே சிரிக்கும் இயல்புடையவள்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்