Skip to content

சொல் பொருள்

(பெ) பார்க்க: மன்றம்

சொல் பொருள் விளக்கம்

பார்க்க: மன்றம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மனை உறை புறவின் செம் கால் சேவல்
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 45,46

வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலினையுடைய சேவல்
 (தான்)இன்பம் நுகரும் பெடையொடு நாற்சந்தியில் (இரை)தேடி உண்ணாமல்

அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும் – அகம் 75/6,7

கொல்லும் புலி போலும் வலியையும் கட்டப்பெற்ற கழலையுமுடைய மறவர்கள்
பழையதாய் வருகிற இயல்பையுடைய தமது சீறூரிலுள்ள மன்றத்தி நிழலிலே கண்படுக்கும்

மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே – அகம் 128/1

ஊர் மன்றம் தன் ஒலி அடங்க மனைகளும் துயின்றன

சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ
மன்று-தொறும் நின்ற குரவை – மது 614,615

புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,
மன்றங்கள்தோறும் நின்ற குரவைக்கூத்தும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *