சொல் பொருள்
(பெ) 1. விருட்சம், 2. மரக்கலம், 3. மரக்கட்டை, 4. வில்,
சொல் பொருள் விளக்கம்
விருட்சம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tree, Ship or boat;, wood, timber, bow
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழு மரம் தேரும் பறவை போல – பெரும் 20 பழுத்த மரத்தைத் தேடித்திரியும் பறவைகளைப் போல, பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை பெரு நீர் போகும் இரியல் மாக்கள் ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு – பெரும் 431-433 பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின் பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள் ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல பெரும் கடல் நீந்திய மரம் வலி_உறுக்கும் பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ – பதி 76/4,5 பெரிய கடலில் சென்றுவந்த மரக்கலத்தினைப் பழுதுநீக்கி மீண்டும் வலிமைப்படுத்தும் பொருள்கள் விற்கும் கடல்வாணிகர் போலப் போரில் ஏற்பட்ட புண்களை ஆற்றி, அகல் இலை முருக்கின் பெரு மர கம்பம் போல பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே – புறம் 169/10-12 அகன்ற இலையையுடைய முருக்கினது பெரிய மரக்கட்டையாற் செய்யப்பட்ட தூணமாகிய இலக்கைப் போல பொருவார்க்குத் தொலையாத நினது வென்றி வாழ்வதாக சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் – கலி 43/3 சந்தன மரத்தின் கட்டையால் செய்யப்பட்ட உலக்கைகளால் வார் கோல் கொடு மர மறவர் பெரும – புறம் 43/10,11 நீண்ட அம்பினையும் வளைந்த வில்லினையும் உடைய மறவர்க்குத் தலைவனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்