Skip to content
மராம்

மராம் என்பது வெண்கடம்பு, செங்கடம்பு

1. சொல் பொருள்

(பெ) வெண்கடம்பு, செங்கடம்பு; பார்க்க : மரவம், மரா

2. சொல் பொருள் விளக்கம்

செங்கடம்பும் வெண்கடம்பும் மரா அம் அல்லது மரவம் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டன. சங்க இலக்கியத்தில் இந்தப் பொதுப் பெயர் வெண்கடம்பைத்தான் குறிக்கும் என்றும், கடம்பு என்ற சொல் செங்கடம்பைத்தான் குறிக்கும் என்றும் தமிழறிஞர் கோவை இளஞ்சேரன் குறிப்பிட்டுள்ளார்.

தாவரவியல் அறிஞர்கள் ஐந்து வெவ்வேறு தாவரங்களை கடம்ப மரத்துடன் தொடர்புபடுத்துகின்றனர்

  1. சுண்ணாம்பு நீறு போல் வெண்மையாகப் பூக்கும்
  2. மணம் மிக்கது
  3. பூ வலமாகச் சுழன்றிருக்கும்
  4. பருந்து இருக்கும் அளவுக்கு உயரமானது
  5. ஏறு தழுவும் வீரர்கள் தென்னவன் (சிவன்) அமர்ந்த ஆலமரத்தையும், கொற்றவை அமர்ந்த மராம் மரத்தையும் தொழுதபின் ஏறு தழுவும் தொழுவினுள் புகுவர்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Neolamarckia Cadamba, Haldina Cordifolia, Barringtonia acutangula

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வாலிய
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம் – அகம் 211/1,2

வெள்ளிய
சுண்ணாம்பு பரந்திருந்தாலொத்த அதன் பலவாய பூக்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *