Skip to content
மரவம்

மரவம் என்பது குங்குமமரம், வெண்கடம்பு.

1. சொல் பொருள்

(பெ) குங்குமமரம், வெண்கடம்பு

2. சொல் பொருள் விளக்கம்

செங்கடம்பும் வெண்கடம்பும் மரா அம் அல்லது மரவம் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டன. செங்கடம்பு (இது ஒரு இலக்கிய உருவகம்; சீரிய, சிறப்பான, வளமான கடம்பு என்று பொருள் கொள்ள வேண்டுமே தவிர, சிவந்த பூக்களைக் கொண்டது என்று பொருள் கொள்ளக்கூடாது. 

அடியார்க்கு நல்லார் ‘மரவம்’ என்பதற்கு வெண்கடம்பு என்று எழுதியதையும் சொல்லலாம்.

சங்க இலக்கியத்தில் இந்தப் பொதுப் பெயர் வெண்கடம்பைத்தான் குறிக்கும் என்றும், கடம்பு என்ற சொல் செங்கடம்பைத் தான் குறிக்கும் என்றும் தமிழறிஞர் கோவை இளஞ்சேரன் குறிப்பிட்டுள்ளார்.

  1. குங்குமமரம், இது மராமரம் என்பர் பொ.வே.சோமசுந்தரனார்
  2. மரவம் – குங்கும மரம் என்பர் ச.வே.சுப்பிரமணியனார்
  3. இது கடம்பு, வெண்கடம்பு என்பார் ஔவை.துரைசாமியார்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

saffron

Seaside Indian oak, Barringtonia racemosa

Neolamarckia Cadamba, Haldina Cordifolia, Barringtonia acutangula

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

குரவம் மலர மரவம் பூப்ப – ஐங் 357/1

குரா மரங்கள் மலர்ந்தமையானும், மராமரங்கள் மலர்ந்தமையானும்

மள்ளர் அன்ன மரவம் தழீஇ – ஐங் 400/1

மறவரை ஒத்த வன்மையுடைய மராமரத்தைப் பற்றித் தழுவிக்கொண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *