Skip to content
கடம்பு

கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 75

கடம்பிடத்தே இருக்கும் நெடிய முருகனை ஒத்த தலைமைச் சிறப்பையும்

1. சொல் பொருள்

(பெ) கடம்பம்,மரம்; கடம்பு, வெண்கடம்பு, செங்கடம்பு, கடப்பம், நீர்க்கடம்பு, சின்னக் கடம்பு, நீலிக்கடம்பு, மஞ்சக்கடம்பு

கன்று போட்ட பசு அல்லது எருமைப் பாலைத் திரித்துத் செய்யப்படுவது

2. சொல் பொருள் விளக்கம்

கடம்பம்,மரம். தமிழரின் முதற் பெரும் கடவுளாகக் கருதப்படும் முருகனோடு பொதுவாகத் தொடர்புபடுத்தப்படும் கடம்ப மரம் 

திருக்கடம்பந்துறை (குழித்தலை – கடம்பர்கோயில்), திருக்கடம்பூர், திரு ஆலவாய் (கடம்பவனம் – மதுரை) ஆகிய திருக்கோயில்கள் கடம்ப மரத்தை தலமரமாகக் கொண்டவை. இத்திருக்கோயில்கள் சார்ந்த ஊரும் மரத்தின் பெயரால் அமைந்து உள்ளன. பட்டை உடல் தேற்றும், வெப்பகற்றும், பழம் குளிர்ச்சி உண்டாக்கும்.

கடம்பு
நீர்க்கடம்பு

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Common cadamba, Anthocephalus cadamba, burflower-tree;

Neolamarckia Cadamba, Haldina Cordifolia, Barringtonia acutangula, Mitragyna parvifolia

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கடம்பு
வெண்கடம்பு
முருகப்பெருமானுக்குரிய மரம்

கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 75

கடம்பிடத்தே இருக்கும் நெடிய முருகனை ஒத்த தலைமைச் சிறப்பையும்

பல அரசர்களுக்குக் காவல்மரமாக இருந்துள்ளது

வயவர் வீழ வாள் அரில் மயக்கி
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப
கடம்பு முதல் தடிந்த கடும் சின வேந்தே – பதி 12/1-3

வீரர்கள் தோற்றுவிழும்படியாக, வாளால் செய்யும் போரினால் அவரை நிலைகுலையச் செய்து
பகைவரின் நாட்டைக் கவர்ந்துகொள்ளும் சுற்றத்தாரையுடைய அரசர்கள் தலைநடுங்கி வணங்க,
அவரின் காவல்மரமான கடம்பரமரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்த கடும் சினத்தையுடைய வேந்தனே!

மலர்கள் வண்ணமயமானவை. நறுமணம் மிக்கவை

பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - பதிற்றுப்பத்து 21

வண்ண கடம்பின் நறு மலர் அன்ன – பெரும் 203

அடிமரம் உறுதியானது, திரண்டு பருத்தது.

திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய – குறி 176

உறுதியாக நிற்கும் கடப்பமரத்தின் திரண்ட அடிப்பகுதியைச் சுற்றிவளைத்து

மலர்கள் உருண்டையானவை, குலைகுலையாய்ப் பூப்பவை

உருள் இணர் கடம்பின் நெடுவேட்கு எடுத்த – பரி 21/50

தேருருள் போன்ற பூங்கொத்துக்களையுடைய கடம்பின் பூவுடன் சேர்ந்து கமழ்கின்ற மாலை

கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி - பெரும் 75

கடம்பு முதல் தடிந்த கடும் சின வேந்தே - பதி 12/3

கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை - பதி 17/5

கடம்பு முதல் தடிந்த கடும் சின முன்பின் - பதி 20/4

கடம்புஅமர்செல்வன் கடி நகர் பேண - பரி 8/126

புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து - பரி 19/2

கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம் - பரி 19/104

முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து - அகம் 127/4

மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய - அகம் 347/4

கடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டி - அகம் 382/3

கடம்புஅமர்செல்வன் கடி நகர் பேண - பரி 8/126

சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும்/மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் - திரு 225,226

ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும் - பரி 4/67

ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட - கலி 106/28

கடம்பும் களிறும் பாடி நுடங்குபு - அகம் 138/11

செல்வ கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி நல்லாய் - ஐந்50:1/2

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்	11.திருமுருகாற்-9.225

காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி.		11.திருமுருகாற்-9.8 

சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும்
   மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் - திரு 225,226

கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே - தேவா-அப்:729/4

காயும் நீர் புக்கு கடம்பு ஏறி காளியன் - நாலாயி:120/1

பூத்த நீள் கடம்பு ஏறி புக பாய்ந்து - நாலாயி:537/2

பல்லவம் திகழ் பூம் கடம்பு ஏறி அ காளியன் பண அரங்கில் - நாலாயி:1259/1

பச்சிலை பூம் கடம்பு ஏறி விசைகொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய் - நாலாயி:1919/3

பவம் அற நெஞ்சால் சிந்தித்து இலகு கடம்பு ஆர் தண்டை - திருப்:26/5

கொங்கு அடம்பு கொங்கு பொங்கு பைம் கடம்பு தண்டை கொஞ்ச செம் சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய் - திருப்:97/4

வண் கையா கடம்பு ஏடு தொடை ஆடு முடி முருகோனே - திருப்:174/10

எண் கடம்பு அணி தோளும் அம் பொன் முடி சுந்தரம் திரு பாத பங்கயமும் - திருப்:457/7

அன்ன நடையாள் குற பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல் - திருப்:478/11

துய்ய வரி வண்டு செய்ய அமுது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும் - திருப்:537/4

செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு திண் தோள் நிரம்ப அணிவோனே - திருப்:586/7

தார் கடம்பு ஆடு கழல் பாத செந்தாமரைகள் தாழ் பெரும் பாதை வழியே படிந்தே வருகு - திருப்:592/10

சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை - திருப்:592/16

சிகரிகள் இடிய நட நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல் - திருப்:657/1

சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசிகா கடம்பு அலங்கல் புனைவோனே - திருப்:734/7

சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும் - திருப்:835/1

சிதம்பர குமார கடம்பு தொடை ஆட சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே - திருப்:891/5

விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள் சதங்கை அடி தாராய் - திருப்:973/4

பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல - திருப்:989/3

நாறு கடம்பு அணியா பரிவோடு புரந்த பராக்ரம நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே - திருப்:1000/4

கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய - திருப்:1145/15

அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே - திருப்:1167/8

வேந்தா கடம்பு புனைந்து அருள் சேந்தா சரண்சரண் என்பது - திருப்:1188/7

கொந்தின் கடம்பு செம் தண் புயங்கள் கொண்டு அம் குறிஞ்சி உறைவோனே - திருப்:1238/5

கண்டியூர் வரு சாமீ கடம்பு அணி மணி மார்பா - திருப்:1306/12

குந்தம் ஆசினி மா கடம்பு இலவு இதழி குங்குமம் செறி திரள் சோலை - சீறா:1002/4

கொந்து அலர் கடம்பு திமில் குங்குமம் அசோகு - சீறா:4131/1

கன்னி இளம் தளிர் கடம்பு மலர்ந்தது என்ன கண்ட விழி இமையாத காட்சி காணா - வில்லி:7 56/3

கள்ளியும் கடம்பும் முள்ளியும் முருக்கும் - உஞ்ஞை:52/41

முந்நீரினுள் புக்கு மூவா கடம்பு எறிந்தான் - மது:17/127

கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி - மது:23/81

கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி - வஞ்சி:24/94

மாநீர் வேலி கடம்பு எறிந்து இமயத்து - வஞ்சி:25/1

கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும் - வஞ்சி:25/187

கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும் - வஞ்சி:28/135

கடம்பு முதல் தடிந்த காவலனை பாடி - வஞ்சி:29/164

கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல் - வஞ்சி:29/171

கடந்து அடு தார் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை - வஞ்சி:29/189

கடம்பு சூடிய கன்னி மாலை போல் - சிந்தா:4 990/1

மின்னின் நீள் கடம்பின் நெடுவேள்-கொலோ - சிந்தா:8 1948/1

கான்ற பூம் கடம்பின் கவட்டு-இடை வளை வாய் பருந்தொடு கவர் குரல் பயிற்றும் - சிந்தா:10 2106/2

கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் - முத்தொள்:90/2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது.

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “கடம்பு”

  1. தகவல்களுக்கு நன்றி ஐயா. மரம் செம்மண் சரளை நிலத்தில் நன்கு வளருமா. எவ்வகை மண்ணில் நன்கு வளரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *