சொல் பொருள்
(வி.எ) 1. மருவி, பழக்கமாகக் கொண்டு, 2. மருவி, பொருந்தி, 3. மருவி, கிட்டிச்சேர்ந்து, 4. மருவி, தழுவி, 5. மருவி, இணைந்து, சேர்ந்து, கலந்து,
சொல் பொருள் விளக்கம்
மருவி, பழக்கமாகக் கொண்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
becoming accustomed, coming into close contact, having come closely, approaching, embracing, having blended, joined together
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புனல் கால்கழீஇய பொழில்தொறும் திரள் கால் சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன நீல பை குடம் தொலைச்சி நாளும் பெரு மகிழ் இருக்கை மரீஇ – பெரும் 380-383 மழைநீர் தூய்மைப்படுத்திய பொழில்கள்தோறும், திரண்ட தண்டினையுடைய சோலையிடத்து நிற்கும் கமுகின் சூல்கொண்ட வயிற்றை ஒத்த நீலநிறம் அமைந்த தோல் பையிலுள்ள கள்ளையுண்டு – நாள்தோறும் பெரிய கள் மகிழ்ச்சியின் இருத்தலைப் பழக்கமாகக்கொண்டு மா கொடி அதிரல் பூவொடு பாதிரி தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி – நற் 52/1-4 கரிய கொடியையுடைய காட்டு மல்லிகையின் மலரோடு, பாதிரியின் தூய தகடு போன்ற மலரை எதிர்த்துக் கட்டிய சரத்தைச் சூடிய கூந்தலின் மணம் கமழும் நாற்றத்திடத்தே பொருந்தினேனாய், நாம் இவளின் அழகுத்தேமல் பரந்த மார்பினைச் சேர்த்துத் தழுவி, பல் பூ கானல் பகற்குறி மரீஇ செல்வல் கொண்க செறித்தனள் யாயே – நற் 258/1,2 நிறையப் பூக்களைக்கொண்ட கடற்கரைச் சோலையில் நீங்கள் பகலில் சந்திக்கும் இடத்தைக் கிட்டிச்சேர்ந்துவிட்டுச் செல்கிறேன், தலைவனே! தலைவியை வீட்டிற்குள் அடைத்துவைத்துவிட்டாள் அவளின் தாய் படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ மறப்பு அரும் பணை தோள் மரீஇ துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதே – குறு 266/3-5 கொல்லைப்புறத்து வேங்கை மரத்துக்கு ஒரு சொல் சொல்ல மறந்துவிட்டாரே! மறக்கமுடியாத பருத்த தோளைத் தழுவி நம்மைத் துறந்து செல்லும் ஆற்றலுள்ளோர் பறவைகள் மூலம் விடும் தூதின் வழியாக அமர் கண் ஆமான் அம் செவி குழவி கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு – குறு 322/1-5 அமர்த்த கண்களையுடைய ஆமானின் அழகிய செவிகளையுடைய குட்டி குறவர்கள் விரட்டியதால் வெருண்டு, தன் கூட்டத்தைவிட்டு ஓடி காட்டின்கண் சேர்ந்துள்ள சிறுகுடியில் அகப்பட்டுக்கொள்ள, இளம்பெண்கள் அதனைப் பேண, அவருடன் கலந்து, அவ்விடத்தை விரும்பி வீட்டில் வாழும் வாழ்க்கையைப் பற்றிக்கொண்டதைப்போல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்