சொல் பொருள்
(வி.எ) 1. மருவிய – வழக்கமாகக் கொண்ட, 2. மருவிய – பொருந்திய, 3. மருவிய – ஒன்றுகல, 4. மருவிய – தழுவிய, 5. மருவிய – எய்திய, சேர்ந்த, 6. மருவிய – பொருந்திய, தன்னுள் கொண்டு அமைந்த
சொல் பொருள் விளக்கம்
மருவிய – வழக்கமாகக் கொண்ட,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
having been accustomed to, having close contact, be united together, blend, embracing, coming near; approaching, constituting, comprising
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள் ஆர்வ நெஞ்சமொடு அளைஇ மார்பு உற படுத்தல் மரீஇய கண்ணே – நற் 171/9-11 பேய்கள் நிலைகொண்டு நடமாடும் பொழுதைக் கொண்ட நள்ளிரவில் ஆசையுடன் அவனுடைய நெஞ்சோடு கலந்து அவனது மார்பினைத் தழுவிக்கொண்டு படுத்திருப்பதை வழக்கமாகக் கொண்ட கண்கள் தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 169 செருப்பு (விடாமல்)கிடந்த வடு அழுந்தின வலிய அடியினையும், அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து மேம்பட மரீஇய வெல் போர் குருசில் – மது 149-151 (பகைவர்)உள்நாடுகளில் புகுந்து, அவரின் அரண்களைக் கைக்கொண்டு, ஆண்டுகள் பல கழியுமாறு (நீ)விரும்பும் இடத்திலே தங்கி, 150 (அந்நிலங்கள்)மேன்மைபெற அந்த நாட்டோடு ஒன்றுகலந்த வெல்லும் போரினையுடைய தலைவனே பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் – நெடு 145 (முன்பு)பூப்போட்ட துகில் இறுகத் தழுவிக்கிடக்கும் உயர்ந்த வளைவினையுடைய அல்குலில் அல்கல் பொய் வலாளன் மெய் உற மரீஇய வாய் தகை பொய் கனா மருட்ட – குறு 30/1-3 நேற்று இரவில் அந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய வாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மருட்ட, போது அவிழ் பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர் புன்னை அம் சேரி இ ஊர் – குறு 320/5-7 மொட்டுகள் விரிந்த பொன்னிற பூங்கொத்துகளைச் சேர்ந்த பறவைகள் ஒலிக்கும் கிளைகளுள்ள புன்னை மரங்கள் சூழ்ந்த அழகிய சேரிகளையுடைய இந்த ஊரில் உள்ளோர் போது அவிழ் பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர் புன்னை அம் சேரி இ ஊர் – குறு 320/5-7 செவ்வி அரும்பு மலர்ந்த பொன் போன்ற பூங்கொத்துக்கள் பொருந்திய, வண்டுகள் ஒலிக்கின்ற கிளைகளையுடைய புன்னைமரங்கள் உள்ள சேரிகள் உள்ள இவ்வூரார்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்