சொல் பொருள்
(பெ) மருளுதல், திகைத்தல்,
சொல் பொருள் விளக்கம்
மருளுதல், திகைத்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be perplexed, bewildered
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வையை வரு புனல் ஆடல் இனிது-கொல் செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல் வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும் வழி மயக்கு_உற்று மருடல் நெடியான் நெடு மாட கூடற்கு இயல்பு – பரி 35/1-6 வையையில் புதிதாக வருகின்ற நீரில் புனலாடுவது இனியதா? முருகப்பிரான் இருக்கும் தலைமைப் பண்புள்ள திருப்பரங்குன்றத்தினை வணங்கி இன்புறுதல் இனியதா? கூர்மையான வேலின் நுனி போன்ற கண்களையுடைய பெண்கள் துணையாக வர இவ்விரண்டினில் எதனைச் செய்வோம் நாம் என்று எந்நாளும் வழியறியாது மருட்சியடைதல், பாண்டியனின் நெடிய மாடங்களையுடைய மதுரை மக்களுக்கு இயல்பு.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்