Skip to content

சொல் பொருள்

(வி) 1. மயக்கிச்சிக்கவை, நயமாகப்பேசி இணங்கவை,  2. மயக்கு, தன்வசப்படுத்து, 3. ஒத்திரு

சொல் பொருள் விளக்கம்

மயக்கிச்சிக்கவை, நயமாகப்பேசி இணங்கவை, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

coax, allur, fascinate, seduce, entice, resemble

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அம்ம வாழி கொண்க எம்_வயின்
மாண் நலம் மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே – ஐங் 139

வாழ்க நீ தலைவனே! என்னிடம் உள்ள
சிறந்த அழகினைப் பாராட்டி மயக்குமொழி பேசும் உன்னைக் காட்டிலும்
உன் பாணன் நல்ல மகளிர் பலரின் பெண்மை நலத்தைச் சிதைக்கவல்லான்.

நீ மருட்டும் சொல்கண் மருள்வார்க்கு உரை அவை – கலி 108/47

உன்னுடைய மயக்கும் சொற்களுக்கு மயங்குவார்க்கு இதைச் சொல்!

பொய் வலாளன் மெய் உற மரீஇய
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே – குறு 30/2-4

அந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய
வாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மயக்க, நினைவு பெற்று எழுந்து
படுக்கையைத் தடவிப்பார்த்தேன்!

தொய்யில் இள முலை இனிய தைவந்து
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/12-14

மேலும் தொய்யில் வரைந்த என் இளமையான முலைகளை இனிதாகத் தடவிக்கொடுத்து,
நெகிழ்வுற்ற தன் அழகிய பருத்த கைகளால், தான் விரும்பும் பெண்யானையைத் தடவிக்கொடுக்கும்
மையல் கொண்ட யானையைப் போல் எனக்குக் காதல்மயக்கத்தையும் ஊட்டி மயக்கினான்;

அலை நீர் தாழை அன்னம் பூப்பவும்
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் – சிறு 146-148

அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்,
(இளவேனிற்காலத்தின்)முதல் நாளில் செருந்தி (பூத்து)பொன்னை ஒத்திருக்கவும்,
முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *