சொல் பொருள்
(பெ) 1. காதல் மயக்கம், 2. மயக்கம், கலக்கம், தடுமாற்றம்,
சொல் பொருள் விளக்கம்
காதல் மயக்கம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enticement, bewilderment
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொய்யில் இள முலை இனிய தைவந்து தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும் மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/12-14 மேலும் தொய்யில் வரைந்த என் இளமையான முலைகளை இனிதாகத் தடவிக்கொடுத்து, நெகிழ்வுற்ற தன் அழகிய பருத்த கைகளால், தான் விரும்பும் பெண்யானையைத் தடவிக்கொடுக்கும் மையல் கொண்ட யானையைப் போல் எனக்குக் காதல்மயக்கத்தையும் ஊட்டி மயக்கினான்; நனவின்வாயே போல துஞ்சுநர் கனவு ஆண்டு மருட்டலும் உண்டே – அகம் 158/10,11 நனவினது உண்மைத் தோற்றம் போல, துயில்வோரைக் கனவு அவ்விடத்து மயக்கலும் உண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்