சொல் பொருள்
(பெ) 1. வீரன், 2. படைத்தலைவன்,
சொல் பொருள் விளக்கம்
வீரன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
brave man, warrior, head of an army
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பீலி கண்ணி பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து – புறம் 274/2,3 பீலியால் தொடுக்கப்பட்ட கண்ணியினையுடைய பெருந்தகையாகிய வீரன் தன் மேல் கொலைகுறித்து வந்த களிற்றின் நெற்றியிலே வேலைச் செலுத்தி திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் – அகம் 13/6 செல்வம் விரும்புகின்ற மார்பின் பாண்டியனின் படைத்தலைவனான இழை அணி யானை சோழர் மறவன் – அகம் 326/9 அணிகலன் அணிந்த யானையையுடைய சோழனின் படைத்தலைவன் வசை இல் வெம் போர் வானவன் மறவன் – அகம் 143/10 பழியில்லாத கொடிய போர் வல்ல சேரனின் படைத்தலைவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்