Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வீரன், 2. படைத்தலைவன்,

சொல் பொருள் விளக்கம்

வீரன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

brave man, warrior, head of an army

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பீலி கண்ணி பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து – புறம் 274/2,3

பீலியால் தொடுக்கப்பட்ட கண்ணியினையுடைய பெருந்தகையாகிய வீரன்
தன் மேல் கொலைகுறித்து வந்த களிற்றின் நெற்றியிலே வேலைச் செலுத்தி

திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் – அகம் 13/6

செல்வம் விரும்புகின்ற மார்பின் பாண்டியனின் படைத்தலைவனான

இழை அணி யானை சோழர் மறவன் – அகம் 326/9

அணிகலன் அணிந்த யானையையுடைய சோழனின் படைத்தலைவன்

வசை இல் வெம் போர் வானவன் மறவன் – அகம் 143/10

பழியில்லாத கொடிய போர் வல்ல சேரனின் படைத்தலைவன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *