Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கொடுஞ்செயல், 2. வீரம் மிக்க செயல்புரிவோன், 

சொல் பொருள் விளக்கம்

கொடுஞ்செயல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

that which is cruel by nature

a person possessing bravery

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
மறவை நெஞ்சத்து ஆய் இலாளர்
—————————— —————————-
விழவு அணி வியன் களம் அன்ன – புறம் 390/1-4

அறம் புரியும் நெஞ்சினையுடைய ஆயர்களும், பெருகுகின்ற
கொடுஞ்செயல் பொருந்திய நெஞ்சத்தினையுடைய சிறுகுடியில் வாழ்பவரும் கூடி எடுக்கும்
——————————– ————————-
விழாவால் பொலியும் அகன்ற மன்றத்தை ஒத்த

அறவை ஆயின் நினது என திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை ஆக – புறம் 44/11-13

அறத்தை உடையையாயின் இது நினதன்றோ என்று சொல்லித் திறத்தல் செய்வாயாக
மறத்தை உடையை ஆயின் போரால் திறத்தல் செய்வாயாக
அவ்வாறன்றி, அறத்தையும், மறத்தையும் உடையை அல்லை ஆக

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *