சொல் பொருள்
(பெ) 1. மீண்டு வருதல், 2. மறுத்தல்,
சொல் பொருள் விளக்கம்
மீண்டு வருதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
returning, denying
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சென்ற தேஎத்து செய்வினை முற்றி மறுதரல் உள்ளத்தர் எனினும் – அகம் 333/20,21 தாம் சென்றுள்ள நாட்டில் தாம் செய்யும் தொழிலை முடித்துக்கொண்டு மீண்டு வரும் எண்ணமுடையவராயினும் அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும் வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய் நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு அரிய வாழி தோழி – நற் 32/3-7 அழகிய மலைக்கு உரியவனான தலைவன் நம்மை விரும்பி எப்போதும் வருந்தினான் என்ற ஒரு வாய்ச்சொல்லை உணரமாட்டாய்; நீயாகவே நேரில் கண்டும், உன்னைச் சேர்ந்தவரோடு கலந்துகொண்டும் அறியவேண்டியவற்றை அறிந்து அளவளாவ வேண்டும்; அவனது நிலையை மறுப்பதற்கு அரியது ஆகும், வாழ்க தோழியே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்