Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மீண்டு வருதல்,  2. மறுத்தல்,

சொல் பொருள் விளக்கம்

மீண்டு வருதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

returning, denying

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சென்ற தேஎத்து செய்வினை முற்றி
மறுதரல் உள்ளத்தர் எனினும் – அகம் 333/20,21

தாம் சென்றுள்ள நாட்டில் தாம் செய்யும் தொழிலை முடித்துக்கொண்டு
மீண்டு வரும் எண்ணமுடையவராயினும்

அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு
அரிய வாழி தோழி – நற் 32/3-7

அழகிய மலைக்கு உரியவனான தலைவன் நம்மை விரும்பி எப்போதும்
வருந்தினான் என்ற ஒரு வாய்ச்சொல்லை உணரமாட்டாய்;
நீயாகவே நேரில் கண்டும், உன்னைச் சேர்ந்தவரோடு கலந்துகொண்டும்
அறியவேண்டியவற்றை அறிந்து அளவளாவ வேண்டும்; அவனது நிலையை மறுப்பதற்கு
அரியது ஆகும், வாழ்க தோழியே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *