சொல் பொருள்
(பெ) திரும்பி வருதல், மீளுதல்,
சொல் பொருள் விளக்கம்
திரும்பி வருதல், மீளுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
coming back, retreading
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின் மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் – கலி 81/33-35 “இப்போது, ஏடி! நான் தீது இலேன் என்று தெளிவாக எடுத்துரைக்கவும், கைமீறிப்போய், சிறிதளவும் என்னிடம் கொண்ட கோபத்திலிருந்து மீளுதல் இல்லை என்றால் சிறப்புடைய எம் தந்தையின் பெயர்கொண்டவனை நான் எடுத்துச் செல்கிறேன்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்