Skip to content

சொல் பொருள்

(பெ) கலக்கம், மயக்கம், குழப்பம்,

சொல் பொருள் விளக்கம்

கலக்கம், மயக்கம், குழப்பம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bewilderment, confusion

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்கு உறுமே – குறு 194

(இந்த நெஞ்சின் நிலையை)என்னவென்று சொல்வது தோழி? மின்னல்வர
 முகில்கள் எழுந்து ஒலிக்கும், அதுமட்டுமோ? அதற்கு எதிராக
 காட்டு மயில்கள் விரைவாக ஏக்கத்துடன் கூவும்
 ஒன்றற்கொன்று தொடர்பிலாது கலந்த இந்த இரண்டு ஒலிகளாலும் என்
 பேதை நெஞ்சம் பெரிய அளவில் கலக்கமடையும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “மலக்கு”

  1. விஜியக்குமார்

    ( மலக்கு ) இறைமகன் இயேசுவின் மரணத்தின் நிலை கூட கலங்கினார் இயேசு உலகத்தின் அணைத்து பாவங்களும் தன் மீது சுமத்தி தனக்கு இந்த உலக வாழ்வின் முடிவை (மரணத்தை) இறைவன் கொண்டு வரப்போகிறார் என்பதை உணர்ந்து இயேசு (மலக்கு) ஆனார். இயேசுவின் சிலுவை மரணத்தின் போது கூட கார்மேகம் சூழ்ந்தது அகிலம் எங்கும் அந்தகாரம் சூழ்ந்தது மின்னல் தோன்றியது பூமி அதிர்ச்சி ஏற்பட்டது நீதிமான்களின் கல்லறைகள் திறந்தது கானகத்தின் மயில்கள் நிச்சயமாக அலறி கூவி ஓலி எழுப்பியிருக்கும் இந்த சூழ்நிலையில் கொல்கதா சிலுவை மரணத்தை காண கூடி இருந்த மக்கள் மனதில் கலக்கம் ( மலக்கு ) நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். மரணமடைந்த இயேசுவின் கல்லறையை யாரும் திறக்காத படி பெரிய கல்லால் மூடி அரசு சீல் வைத்து மூடினார்கள் அந்த கல்லறைக்கு காவலாலிகளை வைத்தனர் நடந்த சம்பவம் மூன்றாம் நாள் அதிகாலையில் மின்னல் போன்ற ஓளியாக தேவதூதன் தோன்றி கல்லறையின் கல்லை புரட்டிப் போட்டார் காவலாளிகள் பேரொளியை கண்டு கண் காணமுடியாமல் கல் புரட்டிப்போடப்படும் சத்தத்தை உணர்ந்து அவ்விடத்தை விட்டு கலக்கத்துடன் (மலக்கு) நம்முடைய உயிர்க்கு ஆபத்து வருமோ என் எண்ணி ஓடி போனார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *