சொல் பொருள்
(பெ) 1. வளப்பம், செல்வம், 2. மிகுதி, பெருக்கம், 3. வலிமை,
சொல் பொருள் விளக்கம்
வளப்பம், செல்வம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wealth, fertility, richness, abundance, fullness, power, strength
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் – நெடு 29 மாடங்கள் உயர்ந்துநிற்கும் வளப்பமுள்ள பழைய ஊரில், மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் – பரி 11/43,44 மிக்க வெள்ளத்தையுடைய வையையே! உன் பெரிய மலையை விட்டு நிலையாகத் தங்கியிருக்கும் இல்லமாகிய கடலுக்கு நீ தனியே சென்றடைவது சிறப்பானதன்று வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர் ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை கூர் நுதி செம் வாய் எருவை சேவல் படு பிண பைம் தலை தொடுவன குழீஇ மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் – அகம் 215/10-15 வடித்தல் செய்த அம்பினையுயைய ஏவலராய மறவர் வழிப்போகும் ஆட்களைக் கொன்று அவர்களை இட்டு மூடிய கண்டார்க்கு அச்சம் வரும் கற்குவியல்களில் கூரிய அலகினைக் கொண்ட சிவந்த வாயினையுடைய ஆண் பருந்துகள் இறந்துபட்ட பிணங்களின்பசிய தலையினைத் தோண்டுவனவாகிக் கூடி வலிய நெருங்கிய விரலால் தோண்டி கண்மணியைப் பெயர்த்துக்கொண்டு வலிய வாயினையுடைய தம் பேடைக்குச் சொரியும் அவ்விடத்தே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்