சொல் பொருள்
(பெ) 1. படைவீரர், 2. திண்ணியர், 3. குறவர், குறிஞ்சி நில மக்கள்,
சொல் பொருள் விளக்கம்
1. படைவீரர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
soldiers, strong powerful persons, the inhabitants of mountainous tract
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை – புறம் 77/9,10 வெகுண்டு மேல் வந்த புதிய வீரரை மதித்தலும் அவமதித்தலும் இலன் மள்ளர் குழீஇய விழவினானும் மகளிர் தழீஇய துணங்கையானும் யாண்டும் காணேன் மாண் தக்கோனை – குறு 31/1-3 உடல் வலிமையுடையவர்கள் கூடியுள்ள சேரி விழாக்களிலும், மகளிர் தழுவியாடும் துணங்கைக்கூத்திலும், எங்குமே கண்டேனில்லை மாண்புக்குரிய தலைவனை! மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇ – ஐங் 371/1,2 குறவர்களின் கொட்டுமுழக்கத்தைக் கேட்டு மயில்கள் களித்து ஆடுகின்ற உயர்ந்து நீண்ட குன்றுகளிலெல்லாம் தொங்கும் மேகங்கள் மழைபெய்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்