Skip to content

சொல் பொருள்

(பெ) 1. குற்றம், 2. தூசு, அழுக்கு, தூய்மைக்கேடு,  3. களங்கம்,

சொல் பொருள் விளக்கம்

1. குற்றம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fault, defect, dirt, stain, blot, spot

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147

குற்றமில்லாத மகளிரோடு கறை இன்றி விளங்க

வலம்புரி புரையும் வால் நரை முடியினர்
மாசு அற இமைக்கும் உருவினர் – திரு 127,128

வலம்புரிச்சங்கினை ஒத்த வெண்மையான நரைமுடியினை உடையவரும்,
அழுக்கு அற மின்னும் உருவினரும்

புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138

புகையை முகந்துகொண்டதைப் போன்ற அழுக்கேறாத தூய உடையினையும்

மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து – சிறு 157

திங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *