Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மேல்தளங்களைக் கொண்ட வீடு, 2. அரண்மனை போன்றவற்றின் மாடிப்பகுதி,  3. பள்ளி ஓடம்,  4. மொட்டை மாடி, 

சொல் பொருள் விளக்கம்

மேல்தளங்களைக் கொண்ட வீடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

storied house, upper storey, a kind of boat, terrace

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 71

மாடிவீடுகள் மிகுந்திருக்கும் தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில்

மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு
வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 355,356

முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடங்களோடு,
வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில்

கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/5,6

கரை உயர்ந்த செறிந்த மணலையுடைய அகன்ற துறைக்கண், நாவாய் ஓட்டுவான்
மாடத்தின் மீதுள்ள ஒள்ளிய விளக்கினால் இடம் அறிந்து செலுத்த

நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர் – பரி 10/27

புதுவெள்ளத்தின் அழகைக் காண்போரும், வரிசையான நீரணி மாடங்களில் ஊர்ந்துசெல்வோரும்

விண் பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 348-350

விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த வேயாது மாடத்தில்,
இரவில் கொளுத்தின விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து
பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *