Skip to content

சொல் பொருள்

(பெ) கட்டுக்கொடி,

சொல் பொருள் விளக்கம்

கட்டுக்கொடி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a creeper used for binding/bundling, Cocculus hirsutus(Linn)Diels

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துறுகல் அயலது மாணை மா கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன் – குறு 36/1,2

குத்தாக நிற்கும் பாறாங்கல்லுக்குப் பக்கத்திலுள்ள மாணை என்னும் பெரிய கொடி
துயிலும் ஆண்யானையின் மேல் ஏறிப்படரும் குன்றுகளுள்ள நாட்டுக்காரத் தலைவன்

மாணை என்பது ஒருவகைக் கொடி. இக்காலத்தில் அதனைக் கட்டுக்கொடி (Cocculus hirsutus(Linn)Diels) என்பர்.
கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி,
விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு.
இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர்
விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும். இது கிராமங்களில் எளிதில் கிடைக்கக்
கூடியது. இதன் கொடி பார்ப்பதற்கு கயிறு மாதிரி இருக்கும். நீண்டு வளர்ந்து இருக்கும். இதன் இலை நாக்கு
வடிவத்தில் காணப்படும். பனை மரம், ஈச்ச மரத்தின் மீது கட்டுக்கொடி படர்ந்து காணப்படும்.

வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாணையின் கொடியால்
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல் – கம்பராமா.அயோ.வனம்புகு.36/1,2

கூட்டிய விரல் திண் கையால் குரங்குகள் இரங்க குத்தி
மீட்டு ஒரு வினை செயாமல் மாணையின் கொடியால் வீக்கி – கம்பராமா.யுத்.ஒற்று.26/1,2

என்ற அடிகள் மாணைக்கொடி ஒரு கட்டுக்கொடி என்பதனை உறுதிசெய்யும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *