சொல் பொருள்
1. (பெ) அளவு, எல்லை, 2. (இ.சொ) மட்டும்,
சொல் பொருள் விளக்கம்
அளவு, எல்லை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
only
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என கூறுவென் போல காட்டி மற்று அவன் மேஎ_வழி மேவாய் நெஞ்சே – கலி 47/22-24 அவன் நின்னை முயங்கும் அளவைத் தன் நெஞ்சாலே கைக்கொண்டுவிட்டான், வா என்று கூறுவாள் போல அவனுக்கு ஒரு பொய்க்குறியைக் காட்டி அவன் மேவின வழியிலே நெஞ்சே மேவுவாயாக என்றாள். – நச். உரை வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என கூறுவென் போல காட்டி மற்று அவன் மேஎ_வழி மேவாய் நெஞ்சே – கலி 47/22-24 அவனோ நம்மை விரும்புகின்றான், தழுவிக்கொள்ள மட்டும் வருக என்று கூறுவது போல் காட்டி பின்னர் அவன் விருப்பப்படி நடந்துகொள்வாய் நெஞ்சமே! – புலி.கேசிகன் உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்