சொல் பொருள்
(பெ) சேரநாட்டைச் சேர்ந்த ஒரு மலை/ஊர்,
சொல் பொருள் விளக்கம்
சேரநாட்டைச் சேர்ந்த ஒரு மலை/ஊர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a hill/city in chera country
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம் பொறையன் கடுங்கோ பாடி சென்ற குறையோர் கொள்கலம் போல – அகம் 142/4-6 நிறுத்துதற்கரிய சேனையினையுடைய போர்வெல்லும் மாந்தரம் பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனைப் பாடிச் சென்ற வறியோரது பிச்சை ஏற்கும் கலம்போல பொறை நாடு என்பது, மலையாள மாவட்டத்தில் உள்ள பொன்னானி, பாலைக்காடு, வைநாடு, வள்ளுவ நாடு, குறும்பர் நாடு, கோழிக்கோடு, ஏர் நாடு ஆகிய வட்டங்களைத் தன்கண் கொண்டது. இப் பொறை நாட்டில், குறும்பர் நாட்டுப் பகுதியில், மாந்தரம் என்றொரு மலைமுடியும் அதனை யடுத்து மாந்தரம் என்றோர் மூதூரும் உண்டு. அவ் வூரைத் தலைநகராகக் கொண்டு வேந்தர் சிலர் ஆண்டு வந்தனர். அவர்களும் பொறை நாட்டரசர்களேயாதலால், மாந்தரன் என்றும், மாந்தரம் பொறையன் என்றும், மாந்தரம் சேரல் இரும்பொறை என்றும் சான்றோர்களால் அவர்கள் வழங்கப்பெற்றனர். மாந்தரம் மாந்தை எனவும் வழங்கிற்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்