சொல் பொருள்
(பெ) 1. மக்கள், 2. ஆடவர்,
சொல் பொருள் விளக்கம்
மக்கள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
human beings, people, male persons
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர் உரம் சா செய்யார் உயர் தவம் – நற் 226/1,2 ஒரு மருந்துமரம் பட்டுப்போகும் அளவுக்கு அதினின்றும் மருந்தைக் கொள்ளமாட்டார்கள்; மக்கள் தம் உடல்வலிமை கெட்டுப்போகுமாறு செய்யமாட்டார்கள் உயர்ந்த தவத்தை மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும் – கலி 145/13 மகளிரின் தோளைச் சேர்ந்த ஆண்கள், அவரின் வருத்தம் மிகும்படியாக அவரைவிட்டுப் பிரிதலும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்