Skip to content

சொல் பொருள்

(வி.மு) 1. மயக்குகின்றது, 2. (மழை)பெய்கின்றது, 3. (பொழுது)மயங்கிவிட்டது, வேறாகிவிட்டது,

சொல் பொருள் விளக்கம்

மயக்குகின்றது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

confuses, rains, showers, has changed, (day) has darkened

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/6-10

மிடுக்கான நடையையும்
மிகுந்த பெருமிதத்தையும் கொண்ட யானைப் படையையுடைய நெடுமான் அஞ்சி
இரக்கமுள்ள நெஞ்சத்தோடு, தனது புகழ் நெடுந்தொலைவுக்கு விளங்க
தேர்களை வாரிவழங்கும் அவனது அரசிருக்கை காண்போரை மயங்க வைப்பதைப் போல
மழைமுகில் மாரியைப் பெய்து நின்று என்னை மயக்குகின்றது – ஔவை.சு.து.உரை

மான்றன்று: மால் என்பதன் அடியாகப் பிறந்த இறந்தகால முற்றுவினைத் திரிசொல் – ஔவை.சு.து.உரை விளக்கம்

தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/9-10

இரவலர்க்குத் தேர்களைப் பரிசுகொடுக்க இருக்கின்ற நாளோலக்கம் போல
மேகம் மழைபெய்யத் தொடங்கி மாறாது ஒரு தன்மையாய்ப் பெய்யாநின்றது – பின்னத்தூரார் உரை.

துறையும் மான்றன்று பொழுதே – அகம் 300/16

நீர்த்துறையிலும் பொழுது மயங்கிவிட்டது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *