Skip to content

சொல் பொருள்

(வி.எ) 1. (இருளோடு மயங்கி) கலந்து, இருட்டிக்கொண்டு, 2. (கார்காலம் என்று மயங்கி) குழம்பி,  3. (மனம் மயங்கி) வருந்தி, 

சொல் பொருள் விளக்கம்

(இருளோடு மயங்கி) கலந்து, இருட்டிக்கொண்டு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

mixed with darkness, darkening, getting confused, being distressed

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மான்று உடன்
உரவுரும் உரறும் நீரில் – நற் 238/7,8

எங்கும் இருள் மயங்க
வலிய இடி முழங்கும் இயல்பினால் – ஔவை.சு.து.உரை

மழையும் தோழி மான்று பட்டன்றே – குறு 289/5

தோழி! மழையும் (கார்ப்பருவம் என்று) மயங்கிப் பெய்கின்றது

கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை – அகம் 3/2-5

கருத்த அடிப்பகுதியை உடைய ஓமை மரத்தின் காண்பதற்கு இனிய பெரிய கிளையில்
மிக்க பாதுகாப்பை உடைய அகன்ற இடத்தில் குஞ்சுபொரித்துக் காத்துக்கிடக்கும்
வளைந்த அலகினை உடைய (தன்)பேடைக்கு இருப்பு உணவைக் கொண்டுவர,
மயங்கி இரையை விரும்பி எழுந்த சிவந்த காதுகளை உடைய எருவைப் பருந்து,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *