Skip to content

சொல் பொருள்

(வி) 1. மாறுபடு, எதிராகு, 2. பகைமைகொள், 3. வேறுபடு,

சொல் பொருள் விளக்கம்

மாறுபடு, எதிராகு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be opposed, be inimical, be different

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தன் ஐயர்
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி
குருதியொடு பறித்த செம் கோல் வாளி
மாறு கொண்டு அன்ன உண்கண் – குறு 272/4-7

தன் தமையன்மார்
முழக்கமிடும், மிகுந்த வேகத்தையுடைய ஆண்மானின் மேல் அழுந்துமாறு எய்த,
குருதியோடு பிடுங்கிய சிவந்த கோலையுடைய அம்புகள்
எதிரிட்டு நின்றதைப் போன்ற மையுண்ட கண்களையும்

மாறுகொண்டோர் மதில் இடறி – புறம் 387/5

பகைமைகொண்டோருடைய மதில்களைத் தகர்த்து

மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை – மலை 136

(குடிப்பதற்கு)மாற்றுப்பொருளாக (நீர்)சொரிந்தன, ஊறுகின்ற நீரையுடைய உயவைக்கொடி

நீரோடே மாறுகொள்ளுமாறு படர்ந்தன விடாய்க்காலத்தே உண்டார் வாய் நீர் ஊறுதற்குக் காரணமான
உயவைக்கொடி – நச். உரை

தாகத்தைத் தணிக்க நீரிலிருந்து மாறுபட்டுப் படர்ந்திருந்த,உண்டால் வாயில் நீர் ஊறும் தன்மை கொண்ட
உயவைக் கொடி. – பொ.வே.சோ. உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *