சொல் பொருள்
(வி.எ) சொல்லிசை அளபெடை , மிகுந்து வரும் பொருட்டு,
சொல் பொருள் விளக்கம்
மிகுந்து வரும் பொருட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
in order to be plentiful
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருவி அற்ற பெரு வறல் காலையும் நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர் உவலை சூடி உருத்து வரு மலிர் நிறை செம் நீர் பூசல் அல்லது – பதி 28/9-13 அருவிகள் வற்றிப்போன பெரும் வறட்சியான காலத்திலும் – உயர்ந்து, கரையை மீறிக்கொண்டு இறங்கும் அகன்ற பரப்புள்ள பேரியாறு பாயும் சிறப்புப் பொருந்திய அகன்ற நிலங்களில் இடங்கள்தோறும் பரந்து மிகும்பொருட்டு காய்ந்த இலைதழைகளைச் சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் வருவதுபோன்ற மிகுந்துவரும் வெள்ளத்தின் சிவந்த நீர் எழுப்பும் ஆரவார ஒலியை அன்றி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்