சொல் பொருள்
(பெ) 1. மீந்துபோனது, எஞ்சியிருப்பது, 2. ஒருவர் உண்டபின் உண்ணாது விட்டுச்சென்ற உணவு, எச்சில்பட்ட உணவு,
சொல் பொருள் விளக்கம்
மீந்துபோனது, எஞ்சியிருப்பது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
remainder, leftover, leavings of a meal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னோடு உண்டலும் புரைவது – குறி 206,207 விருந்தினராக உண்டு மீந்துபோன உணவை, உயர்ந்த குணநலமுடைய பெண்ணே, உன்னோடு (நான்)உண்பதும் உயர்ந்ததேயாம் கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் – நற் 290/2,3 கன்றை உடைய அண்மையில் ஈன்ற பசு தின்றுவிட்டுப்போன மிச்சத்தை ஓய்ந்துபோன நடையையுடைய முதிய காளை ஆவலுடன் தின்னும் ஊரைச் சேர்ந்தவனின் புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை குற குறு_மாக்கள் உண்ட மிச்சிலை புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் – நற் 168/3-5 தேனீக்கள் மொய்த்ததால் கசிந்த இனிய தேன், கீழே பாறையின் மேலுள்ள குழிகளில் வழிய, அதனைக் குறவர்களின் சிறுவர்கள் உண்டபின் எஞ்சியதைப் புல்லிய தலையைக் கொண்ட மந்தியின் வலிய குட்டிகள் நக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்