Skip to content

மீக்கூற்றம்

சொல் பொருள்

(பெ) 1. புகழ்ச்சி, 2. மேலே கூறும் சொல், 3. மேலாகிய சொல்,

சொல் பொருள் விளக்கம்

புகழ்ச்சி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

adoration, praise, word said over and above (this), speech or word which wins regard, word deserving praise, regard

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேண்டார்
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே – புறம் 135/20-22

பகைவரது
மிக்க மாறுபாட்டை வென்ற வலியையுடைய
யாவரும் ஒப்பும் புகழ்ச்சியையுடைய நாட்டையுடையாய்

மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது
நாண் இலன் ஆயின் நலிதந்து அவன்_வயின்
ஊடுதல் என்னோ இனி
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா
பாடு இல் கண் பாயல் கொள – கலி 87/11-16

“மான் போன்ற பார்வையை உடையவளே! நீ அழும்படியாக உன்னைப் பிரிந்தவன், பரத்தைமையில் அமையாமல்
வெட்கமற்று இருப்பவன் என்றால் உன்னை வருத்திக்கொண்டு அவன்மேல்
ஊடல் கொள்ளுதலால் என்ன பயன், இப்போது?”
“இனிமேல் ஒன்றும் இதற்குமேல் சொல்வதற்கு என்னிடம் இல்லை என்கிற
நிலைமையைக் காண்பாய் நெஞ்சே!, கண்ணீர் எல்லைகடந்த,
தூக்கம் இல்லாத கண்கள் சிறிதே படுத்துறங்கும்படி.”

மீக்கூற்றம் மேலே கூறும் சொல் – நச்.உரை

வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த – சிறு 212

வாள் வலியாலே மேலாகிய சொல்லையுடைய மறவர் புகழ,

வாள் மீக்கூற்றத்து வயவர் என்றது வாள் வலியாலே ஒப்பிலா மறவர் எனத் தம்மை உலகம் புகழ்தற்குரிய
மறவர் என்க, மீக்கூற்றம் – மேலாகிய சொல்; அஃதாவது புகழ் – பொ.வே.சோ. உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *