சொல் பொருள்
1. (வி) 1. வெறு, 2. வீசு,
2. (பெ) 1. போர்முனை, 2. பகைவர் நாடு, 3. ஊர் அல்லது தெருவின் இறுதி, 4. பகை,
சொல் பொருள் விளக்கம்
முழவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dislike, hate, blow as a wind, warfront, enemy country, either end of a village or street, enmity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொண்டல் இடு மணல் குரவை முனையின் வெண் தலை புணரி ஆயமொடு ஆடி – அகம் 20/7,8 கீழ்க்காற்று கொணர்ந்த மணலில் குரவைக்கூத்து ஆடி, அது வெறுத்துப்போய், வெள்ளிய நுரையைத் தலையில் கொண்ட கடல் அலைகளில் தோழியரோடு ஆடி, ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம் மா இரும் பெடையோடு இரியல் போகி – பட் 55,56 (நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய கரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி, பணை நிலை முனைஇய பல் உளை புரவி – நெடு 93 கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள் வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில் – பதி 47/3,4 மலைமேலிருந்து விழும் அருவியினைப் போல, மாடங்களின் மேலிருந்து காற்று வீசி அசையும் கொடிகள் ஆடி அசையும் தெருவில் (ச.வே.சு.உரை) முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை – சிறு 105 குறையாமல் கொடுத்த, போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கையினையும் முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின் – குறி 128 பகைவர் நாட்டைப் பாழாக்கும் நெருங்குவதற்கு முடியாத வலிமையையுடைய, முனை ஊர் பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் தேர் வண் மலையன் – நற் 100/7-9 ஊர் முனையிலுள்ள பல பசுக்களின் நீண்ட வரிசையை வில்லினால் போரிட்டுக் கவர்ந்து செல்லும் தேர்களைக் கொடையாகக் கொடுக்கும் மலையன் முனை எழ தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன் மலி புனல் வாயில் இருப்பை அன்ன – நற் 260/5-7 பகை மிகுதலாலே ஆண்டு வந்த பகைவரை அழித்த சிவந்த வேற்படையையுடைய வீரனாகிய விரான் என்பவனது நிறைந்த புனல்வாயிலை அடுத்து இருப்பையூர் போன்ற (பின்னத்தூரார் உரை)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்