சொல் பொருள்
(பெ) 1. முன்னால் நிறுத்துவது, 2. முன்னால் நிற்றல், 3. படைகளின் முன்பகுதி, தூசிப்படை
சொல் பொருள் விளக்கம்
முன்னால் நிறுத்துவது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which can be placed in front of you (as equal), standing in the front, the forefront of an army
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாணன் வைத்த விழு நிதி பெறினும் பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ – மது 203-206 வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும், பழி நமக்கு வரட்டும் என்றுகூறாய், (மாறாக)சீரிய செல்வப் பெருக்கை வழங்கும் எண்ணத்துடன் புகழைமட்டும் விரும்புவாய்; அத்தன்மையுடையாய், உன்னோடு முன்னிலையாக வைத்துக்கூறுவதற்கு யாதுளது? வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த பெரு வள கரிகால் முன்னிலை செல்லார் – அகம் 125/17,18 அச்சந்தரும் சேனையுடன் தான் விரும்பும் புலத்தில் தங்கிய பெரிய வளத்தையுடைய கரிகால் வளவன் முன் நிற்றலை ஆற்றாராய் ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று நிரையொடு வரூஉம் என் ஐ – புறம் 262/4,5 பகைவரது தூசிப்படையை முறித்து, பெயர்ந்து போகிறபோது தனது படைக்குப் பின்னே நின்று நிரையுடனே வருகின்ற என் இறைவனுக்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்