Skip to content

சொல் பொருள்

(வி) 1. கருது, 2. அடை, சேர், 3. அணுகு, அருகில் செல், 4. எழு, பொங்கு

சொல் பொருள் விளக்கம்

கருது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

think, contemplate, reach, arrive at, approach, go or come near, rise, swell

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – திரு 66

இப்பொழுதே பெறுவாய், நீ கருதிய வினையின் பயனை;

வானத்து அன்ன வளம் மலி யானை
தாது எரு ததைந்த முற்றம் முன்னி – மலை 530,531

மழைமேகங்களைப் போன்ற செழுமை மிகுந்த யானைகள்(இருக்கும்),
(காய்ந்த)சாணத் துகள்கள் (யானை மிதிப்பதால்)சிதறிக்கிடக்கும் முற்றத்தை அடைந்து,

பல் கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெரு மலை விடர்_அகம் சிலம்ப முன்னி
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று
பெறாது பெயரும் புள்ளினம் போல – புறம் 209/7-10

பல பழத்தையும் நச்சி, தாம் வாழ்வதற்கிடமாகிய ஆகாயத்தின்கண்ணே உயரப் பறந்து
பெரிய மலையின் முழை எதிரொலி முழங்கச் சென்று
அவ்விடத்துப் பழமுடைய பெரிய மரம் பழுத்து மாறிற்றாக வருந்தி
பழம் பெறாதே மீளும் புள்ளினத்தை ஒப்ப

நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு – பரி 12/7,8

செறிந்த நீரையுடைய கடல் பொங்கி வருவதைப் போன்றிருக்கிறது – இனிய நீரையுடைய
காற்றோடு கலந்து வரும் வையையின் வரவு;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *