சொல் பொருள்
(பெ) 1. முற்காலம், பழமை,
2. முன்பக்கம்
சொல் பொருள் விளக்கம்
முற்காலம், பழமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
former times, antiquity
opposite side
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முன்னை மரபின் முதுமொழி முதல்வ – பரி 3/47 அநாதிக் காலமாய் வரும் மரபினையுடைய வேதத்திற்கு முதல்வனே! பாங்கு அரும் பாட்டம்_கால் கன்றொடு செல்வேம் எம் தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ – கலி 116/1-3 “பக்கத்தில் இருக்கும் உள்ளே எளிதில் போகமுடியாத தோட்டத்திற்குக் கன்றோடு செல்கின்றபோது எம் தாம்புக்கயிற்றின் ஒரு முனையைப் பிடித்துக்கொண்டவனாய், இங்கு எம்மை முன்னால் நின்று தடுத்து நிற்பவனே! நீ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்