சொல் பொருள்
(பெ) முசுறு என்னும் ஒருவகை எறும்பு, செந்நிறமுள்ள எறும்பு வகை
சொல் பொருள் விளக்கம்
முசுறு என்னும் ஒருவகை எறும்பு, செந்நிறமுள்ள எறும்பு வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Red ant, Formica smaragdina
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழன பாகல் முயிறு மூசு குடம்பை கழனி நாரை உரைத்தலின் செந்நெல் விரவு வெள் அரிசியின் தாஅம் – நற் 180/1-3 வயலருகே இருக்கின்ற பலாமரத்தில் முயிறு எனப்படும் சிவந்த பெரிய எறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை கழனியில் இரைதேடிவந்த நாரை தேய்த்துச் சிதைத்ததால், செந்நெல் கலந்த வெள்ளை அரிசியைப் போல் எறும்புகளும் அவற்றின் முட்டைகளும் பரந்துகிடக்கும் பழன பாகல் முயிறு மூசு குடம்பை கழனி எருமை கதிரொடு மயக்கும் – ஐங் 99/1,2 நீர்நிலைகளை ஒட்டிப் படர்ந்திருக்கும் பாகல் கொடியில், முசுற்றெறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை வயல்வெளிகளில் மேயும் எருமை, நெற்கதிரோடு சேர்த்து உழப்பிவிடும் இந்த முசிற்றெறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழும். பெரிய இலைகலையுடைய மா, பலா ஆகிய மரங்களில் அதன் இலைகளை ஒன்றுசேர்த்துக் கூடுகட்டி முட்டையிட்டு வாழும். இங்கே வயல்வெளி ஓரங்களில் படர்ந்து கிடக்கும் பாகற்கொடியின் இலைகலைச் சேர்த்து அவை கூட்டுகட்டுவதாகப் புலவர் கூறுகிறார்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்