சொல் பொருள்
(வி.அ) அடுத்தடுத்து, முறைப்படி,
சொல் பொருள் விளக்கம்
அடுத்தடுத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one after another,
according to the order, status etc.,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு முன்னோன் முறைமுறை காட்ட – நெடு 176,177 வேப்பம் பூ மாலையைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே முன்செல்கின்றவன் (புண்பட்ட வீரரை) முறைப்படி (வரிசையாகக்) காட்ட கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும் புன்_புலம் தழீஇய புறவு அணி வைப்பும் – பதி 30/23-25 மணம் மிக்க காட்டு மல்லிகை வளர்கின்ற, வலிய நிலத்தைச் சேர்ந்த, மனைகளில் மென்மையான தினை மாவை விருந்தினருக்கு முறைப்படி பகிர்ந்தளிக்கும் புன்செய் நிலங்களைத் தழுவிக்கிடக்கும் முல்லை நிலத்திற்கு அண்மையிலுள்ள குறிஞ்சிப் பகுதி மக்களும் – உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர் பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தர_தர – அகம் 86/8-10 உச்சியில் குடத்தினை உடையவரும், கையினில் புதிய அகன்ற கலத்தினை உடையவரும் ஆகிய மணத்தினைச் செய்துவைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவும், பின்னே தருவனவும் முறைப்படி தந்திட விழவின், கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியும் இ உலகத்து – புறம் 29/22-24 விழாவின்கண் ஆடும், கூத்தரது வேறுபட்டகோலம் போல, முறைப்படி (அடுத்தடுத்து) தோன்றி, இயங்கி, இறந்து போகின்ற இவ்வுலகத்தின்கண்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்